கேகாலை, மாவனெல்லை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 08 மாணவர்கள் திடீர் சுகயீனமுற்று மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (03) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
நான்காம் வகுப்பில் கல்வி கற்கும் ஓன்பது வயதுடைய பாடசாலை மாணவர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் நேற்றைய தினம் காலை 10 மணியளவில் பாடசாலைக்கு அருகில் உள்ள மரமொன்றிலிருந்த காய்களை உட்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இந்த பாடசாலை மாணவர்கள் வாந்திபேதி மற்றும் வயிற்றுவலி ஏற்பட்டு திடீர் சுகயீனமுற்றுள்ள நிலையில் மாவனெல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.