தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் முரண்பாடானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று (04) சபையில் மேலும் தெரிவித்த அவர்,
“ஜனாதிபதியின் கொள்கை அறிக்கைக்கும் தேர்தலின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்தக் கொள்கைகள் உண்மையில் கொண்டு வரப்படுமா அல்லது சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்புக் கொள்ளப்பட்ட கொள்கைகளா என்ற கேள்வி எங்களுக்கு உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டது நீங்கள் தேர்தலின் போது கூறிய கொள்கையல்ல. அடுத்த ஆண்டு நீங்கள் ஐநூறு பில்லியனை கொண்டுவர வேண்டும். எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காலவரையின்றிய வரிகள் மூலமா?
ஒரு சமயம் அரிசி கொண்டு வரமாட்டோம் என்றீர்கள். இப்போது அரிசி கொண்டு வருகிறார்கள் என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.