திருகோணமலையில் எட்டு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை அன்புவழிபுரம் பிரதேசத்தை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பிரதேசத்தில் கேரள கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, திருகோணமலை காவல்துறை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர், மேற்படி இடத்துக்குச் சென்று சந்தேக நபரை சோதனை செய்துள்ளனர்.
இந்தநிலையில், சந்தேக நபரிடம் இருந்து எட்டு கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபர், மேலதிக விசாரணைக்காக திருகோணமலை உப்புவெளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.