ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுக பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.
வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
ரேணுக பெரேராவின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.