Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாதி வெறியில் மூன்று பெண்களை நிர்வாணமாக்கி வீதிவீதியாக பலாத்காரம் செய்த கும்பல்; நடந்தது என்ன?

சாதி வெறியில் மூன்று பெண்களை நிர்வாணமாக்கி வீதிவீதியாக பலாத்காரம் செய்த கும்பல்; நடந்தது என்ன?

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

மணிப்பூர் வன்முறையில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் 2 அல்ல 3 பெண்களை அந்த கும்பல் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான திடுக்கிட வைக்கும் தகவலை புகார்தாரர் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள மணிப்பூரில் பழங்குடியின மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர்.

இங்கு குக்கி எனும் பழங்குடி மக்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தான் மைத்தேயி பிரிவு மக்கள் தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் குக்கி மற்றும் மைத்தேயி மக்கள் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.

இந்த வன்முறை மாநிலம் முழுவதும் வேகமாக பரவியது. துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவங்கள் அரங்கேறின. தொடர் பதற்றத்தால் அங்கிருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்த நிலையில் சுமார் 140க்கும் அதிகமானவர்கள் வன்முறையில் இறந்துள்ளனர். இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் அளிக்காத நிலையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறையின் ஒருபகுதியாக பைனோம் கிராமத்தில் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணப்படுத்திய கும்பல் ஊர்வலமாக அழைத்து சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை. கடத்தல், பாலியல் தொல்லை, பலாத்காரம் என வெவ்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் நிர்வாணப்படுத்தி சித்ரவதைக்குள்ளான பெண்கள் 2 பேர் அல்ல.. 3 பேர் என்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து புகார்தாரர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள புகாரில் அதுபற்றிய தகவல்கள் உள்ளன.

அதாவது வீடியோவில் 20 வயது மற்றும் 40 வயது நிரம்பிய 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டுள்ளது பதிவாகி உள்ளது. ஆனால் இன்னொரு பெண்ணும் நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அவருக்கு வயது 50 ஆகும். இதில் 20 வயது பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த கும்பலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். இவர்களில் ஒரு ஆண் கொலை செய்யப்பட்டுள்ளார். மே மாதம் 4ம் தேதி மணிப்பூரின் காங்போக்பி மாவட்டம் பைனோம் கிராமத்தில் 800 முதல் 1000 பேர் அடங்கிய கும்பல் அந்த குடும்பத்தின் மீது தாக்குதல் நடத்தியது. நவீன ரக துப்பாக்கி, ஆயுதங்களை கொண்டு தாக்கி மிரட்டியது. இதனால் 5 பேரும் வனப்பகுதிக்குள் ஓடினர். இவர்கள் 5 பேரையும் நோங்போக் செக்மாய் போலீசார் மீட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கும்பல் இடைமறித்து தாக்கினர். பெண்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக ஊர்வலம் அழைத்து சென்றனர். அதன்பிறகு பொதுமக்களின் உதவியுடன் பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது 3 பெண்களும் நிவாரண முகாம்களில் உள்ளனர்” என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதற்கிடையே தான் இந்த சம்பவத்தில் மகளிர் ஆணையம், மனித உரிமைகள் ஆணையம் தலையிட வேண்டும். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதேசமயம் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூர கும்பலில் தன்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்ததாகவும், போலீசார்தான் தங்கள் மக்களை மெய்தி சமூகத்தினரிடம் காட்டிக்கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார். அதில், பேசிய அவர், “அந்த கும்பலிடம் எங்களை ஒப்படைத்ததே காவல்துறைதான். எங்கள் கிராமம் மீது தாக்குதல் நடத்திய கும்பலுடன் போலீசாரும் இருந்தனர்.

எங்களை வீட்டுக்கு அருகிலிருந்து அழைத்து சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் கடந்து அந்த கும்பலுடன் சாலையில் விட்டுச் சென்றதே போலீஸ். அந்த வீடியோவில் இருந்த 2 பெண்களில் இளம் வயது பெண்ணின் தந்தை மற்றும் அவரது இளைய சகோதரரையும் அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கிறது.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இருப்பது கூட எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ தெரியாது. அந்த கும்பலில் என்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்தான். அவர் உட்பட ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காட்ட முடியும். மற்றவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது.” என்றார்.

இதில் ஜாதி வெறியால் நண்பனின் சகோதரி என்று கூட பார்க்காமல் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையே உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்ட பழங்குடி மக்களை கொலைகார கும்பலிடம் ஒப்படைத்து இந்த செயலுக்கு துணைபோய் இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

தொடர்புடையசெய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
செய்திகள்

பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த மாணவன்; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

May 15, 2025
துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்
உலக செய்திகள்

துருக்கிக்கு 304மில்லியன் டாலர் ஏவுகணை விற்பனைக்கு அமரிக்கா ஒப்புதல்

May 15, 2025
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி
செய்திகள்

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பது தூதுவரின் முக்கிய பொறுப்பாகும்; ஜனாதிபதி

May 15, 2025
இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்
செய்திகள்

இரு மாணவர்களிடையே கை கலப்பில் முடிந்த காதல் பிரச்சனை; திருமலையில் சம்பவம்

May 15, 2025
அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
செய்திகள்

அக்கரைப்பற்றில் சுனாமியினால் பாதிப்புற்றோர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 15, 2025
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை; ஆலையடிவேம்பில் 04 பேர் கைது

May 15, 2025
Next Post
ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2023; ஆரம்பமே வெற்றி!

ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2023; ஆரம்பமே வெற்றி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.