ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை 2023 போட்டியை நடத்தும் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா அணிகள் முதல் நாளிலேயே வெற்றியுடன் தொடங்கின.
FIFA மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் இன்று (வியாழன்) நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி நார்வேயை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இது உள்கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணி பெட்ரா முதல் வெற்றியாகும்.
அதே ஸ்கோரில் (1-0) இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி அயர்லாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணி நார்வே போட்டியை ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் 42,000 க்கும் அதிகமானோர் கண்டுகளித்தனர். இது நியூசிலாந்தில் வரலாறு காணாத பார்வையாளர் எண்ணிக்கை என கூறப்படுகிறது.
அதேபோல், அவுஸ்திரேலியா vs அயர்லாந்து போட்டியைக் காண 75,000-க்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியாவில் சிட்னி ஸ்டேடியத்தில் நிரம்பியிருந்தனர்.