பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் கடந்த 04ஆம் திகதி கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரை 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யுமாறு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிமடை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 59 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த மாணவியின் தாயும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஆவார்.
பிணையில் விடுதலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த 02ஆம் திகதி பொலிஸ் முச்சக்கரவண்டியில் தியத்தலாவை பிரதேசத்துக்குச் சென்று, பாடசாலை மாணவியை அங்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலேயே அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.