பாராளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது.
இதில் 46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார்.
இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றத்திற்கான தலைவராக ஜீவன் தொண்டமான் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.