Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு பகுதியில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 52 வயதுடைய கிருஷ்ணபிள்ளை உதயராசா என்ற உதயன் என்பவருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த நபருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் இன்று (30) வெள்ளிக்கிழமை இந்தத் தண்டனைத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி, சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த 16 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குறித்த நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், 2023 ஆம் ஆண்டு குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன.

இவ்வழக்கில் அரச தரப்பு சட்டத்தரணிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 23 ஆம் திகதி குறித்த நபர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தண்டனைச் சட்டக்கோவை 354 ஆம் பிரிவின் கீழ், சட்டரீதியான பாதுகாப்பில் இருந்த சிறுமியை அழைத்துச் சென்ற குற்றத்திற்காக ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டான பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தண்டனைச் சட்டக்கோவை 345 ஆம் பிரிவின் கீழ் குறித்த நபர் விடுவிக்கப்பட்டார்.

மேலும், தண்டனைச் சட்டக்கோவை 364 ஆம் பிரிவின் கீழ் பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும், அதனைச் செலுத்தத் தவறினால் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இரு குற்றங்களுக்குமான கடூழிய சிறைத்தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, குறித்த நபருக்கு மொத்தமாக 21 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!
செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

October 30, 2026
இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!
செய்திகள்

வரி சுமையைக் குறைக்கவும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரியும் வவுனியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் போராட்டம்!

October 30, 2026
இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!
செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட 64 கொள்கலன் காய்ந்த மிளகாய் சுங்கத்தில் தேக்கம்!

October 30, 2026
ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை
செய்திகள்

ஏறாவூர் தன்னாமுனையில் நபர் ஒருவரை கடத்தி சென்று சிறை வைத்த 36 வயதுடையவருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை

October 30, 2026
Next Post
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு