நாடுபூராகவும் தற்போது இந்த பார் பெர்மிட் விவகாரம் பெரிதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
அதுமட்டுமல்லாது 2024 ஜனவரிக்குப் பிறகு 362 அனுமதிப் பத்திரங்களும் 174 FL4 அனுமதிப்பத்திரங்களும் அப்போதைய ஜனாதிபதியின் கீழிருந்த நிதியமைச்சின் மூலமாக வழங்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ஒரு பட்டியலும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் சுமந்திரனின் சிபாரிசில் மானிப்பாய் பகுதியில் ஒரு பார் பெர்மிட்ற்கு அனுமதி பெற்று கொடுத்திருப்பதாக முகநூல் ஒன்றில் கீழ்காணும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்த செய்தி தெரிவிப்பதாவது,
பார் பெர்மிட் அனுமதியையும் பெற்றுக்கொடுத்து பிரதம விருந்தினராக கலந்துகொண்டு திறப்புவிழாவினை செய்த சுமந்திரன்! ஆதாரம் இதோ… ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லை.
கோத்தபாய ராஜபக்க்ஷ ஆட்சிக்காலத்தில் 2021 ஆண்டு கொரோனா காலத்தில் யாழ்ப்பாணம் மானிப்பாய், கட்டுடையில் Momondo Restaurant and Hotal அமைப்பதற்கு உரிய சிபார்சினை சுமந்திரன் வழங்கி bar இயங்க முயற்சி எடுத்த வேளை அந்த ஊர் மக்களின், கடும் எதிர்ப்பு காரணமாக சண்பிலிப்பாய் பிரதேச செயலாளர் அனுமதி வழங்க மறுத்த நிலையில், அப்போது பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான M.A சுமந்திரனின் சிபார்சில் மது விற்பனைக்கு என இல்லாது அங்கு வைத்து மது அருந்தி தங்கி செல்லலாம் எனவும் இதனை Restaurant and Hotal என வைத்து செயற்பட அனுமதிக்குமாறு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம், வலிகாமம் தென் மேற்கு மானிப்பாய் பிரதேச சபை தவிசாளரிடமும் சொல்லி ஐனாதிபதி கோத்தபாயவின் நிதி அமைச்சின் அதிகாரிகளிடமும் கதைத்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தார் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள்.
இது மிக கடுமையான சுகாதார நெருக்கடியான கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சம்பவம்.
இதனை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் இணைந்து, வலி தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் நடனேந்திரன், வலி தெற்கு மேனாள் தவிசாளர் தி.பிரகாஷ் ஆகியோர் Restaurant நாடாவை வெட்டி திறந்து வைத்தார்..
இவருடைய பணி என்ன ? எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் Restaurant திறப்பு விழாவினை பிரதம விருந்தினராக சென்று திறந்ததில்லை. அப்படி இருக்கையில் இன்றும் மானிப்பாய் வீதி கட்டுடையில் அமைந்துள்ள Momondo Restaurant பலர் தங்கியிருந்து மது விபச்சாரம் நடப்பது உண்டும்.
இன்றும் சுமந்திரனின் அணியினர், இந்த சாராயக்கடையில் தங்கியிருந்தே மது அருந்துவார்கள். சுமந்திரன் அணியின் மது விருந்து இந்த Restaurant இல் தான் நடக்கும், இது தெட்ட தெளிவான விடயம், கட்டுடையில் அருகில் உள்ள மக்களை கேட்டால் இந்த அநியாயத்தை சொல்வார்கள்.
இந்த Bar Restaurant உரிமையாளர் யார், இவருக்கும் சுமந்திரனுக்கும் என்ன தொடர்பு, இந்த Bar திறப்பதில் மக்களின் எதிர்ப்பை சுமந்திரன் எப்படி முறியடித்தார், இதனுடைய முழுமையான தகவலை தகவல் அறியும் உனிமைச் சட்டத்தின் கீழ் வலிகாமம் தென் மேற்கு பிரதேச செயலகத்தில் (சண்டிலிப்பாய் ) பெற்று உண்மைகள் வெளிக்கொணரப்படும். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.