Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

சபாநாயகரை சர்வாதிகாரி என சபையில் திட்டிய ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தை ஒழுங்குப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு சர்வாதிகாரியை போன்று செயற்படாதீர்கள். முன்னாள் சபாநாயகர்கள் இந்தளவுக்கு ஒருதலைப்பட்சமாக செயற்படவில்லையென ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை நோக்கி குறிப்பிட்டார்.

பாராளுமன்ற நிலையியல் கட்டளையை வீட்டில் இருந்து முதலில் கற்றுக்கொள்ளுங்கள், பல ஆண்டுகாலமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு நிலையியல் கட்டளையின் ஏற்பாடுகள் தெரியவில்லை. இது பெரியதொரு பிரச்சினையாகவுள்ளதெனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் வெள்ளிக்கிழமை (06) கூடிய வேளையில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது ஒழுங்குப்பத்திரத்தில் உள்ள கேள்விகளுக்கு மேலதிகமாக விடயதானத்துக்கு அப்பாற்பட்ட கேள்விகளை கேட்க முடியாதென சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இதன்போது, பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 92ஆவது பிரிவை சுட்டிக்காட்டி உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஒரு அமைச்சின் விடயதானத்துக்குள் உள்ளடங்கும் சகல திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுடன் தொடர்புடைய விடயங்களை மேலதிக கேள்வியாக கேட்கலாம் என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், நிலையியல் கட்டளையின் பிறிதொரு ஏற்பாட்டை குறிப்பிட்டு, சமிந்த விஜேசிறியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரையாற்றுவதற்கு சமிந்த விஜேசிறி அனுமதி கோரிய நிலையில் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இவ்வேளையில் சமிந்த விஜேசிறி, சபையை ஒழுங்கு படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு சபாநாயகர் ஒருதலைப்பட்சமான முறையில் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார். முன்னாள் சபாநாயகர்கள் இந்தளவுக்கு செயற்படவில்லையென குற்றஞ்சாட்டினார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர், பாராளுமன்ற நிலையியல் கட்டளையை வீட்டில் இருந்து முதலில் கற்றுக்கொள்ளுங்கள். பல ஆண்டுகாலமாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களுக்கு நிலையியல் கட்டளையின் ஏற்பாடுகள் தெரியவில்லை. இது பெரியதொரு பிரச்சினையாகவுள்ளதன பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை நோக்கி குறிப்பிட்டார்.

Tags: BattinaathamnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

குணப்படுத்தவே இயலாத மார்பகப் புற்றுநோயுக்கு கேபிவசெர்டிப் என்ற மருந்து கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.