செங்கலடி கரடியனாறு பிரதான வீதி காயங்குடா வீதியில் நடந்து சென்ற பாதசாரி மீது கரடியனாறு பொலிஸ் பொறுப்பகாரி ஓட்டிச் சென்ற ஜீப்வண்டி மோதிய விபத்தி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (07) இரவு 10 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன், குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன இடமாற்றம் பெற்றுச் செல்கின்றதையடுத்து அவருக்கு இரவு போசனம் வழங்கி பிரியாவிடை செய்யும் நிகழ்வு பாசிக்குடாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றது. இதில் மாவட்டதிலுள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த இரவு போசன நிகழவுக்கு கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவருக்கு சொந்தமான ஜீப்வண்டியில் தனியாக சென்று, அங்கு அவர் விருந்தை முடித்துக் கொண்டு இரவு 10.00 மணிக்கு கரடியனாறு பொலிஸ் நிலையத்துக்கு ஜீப் வண்டியில் திரும்பிக் கொண்டிருந்தபோது காயங்குடா பகுதியில் பிரதான வீதியால் நடந்து சென்ற ஒருவர் மீது குறித்த வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நடந்து சென்ற பாதசாரி படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன், வாகனத்தை ஓட்டிச் சென்ற பொலிஸ் பொறுப்பதிகாரி செங்கலடி வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (8) காலை சிகிச்சையை பெற்று வெளியேறியுள்ளார்
இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸ் பொறுப்திகாரியை கைது செய்ததுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.