Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்டும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

2 years ago
in செய்திகள்

நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என மக்கள் போராட்டக் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்வடாறு குறிப்பிட்டார்.

மேலும், மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்ய தேங்காய் இல்லாவிட்டாலும், தேங்காய் ஏற்றுமதி மூலம் பெரும் இலாபத்தை ஈட்ட ஒரு தரப்பினர் செயற்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எனவே, அரசாங்கம் உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று அவர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அத்துடன், தேங்காய் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை தேங்காய் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சந்தையில் ஒரு தேங்காய் 192 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பில் ஒருசில பகுதிகளில் 120 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்னை மரங்களை தாக்கும் ஒரு வகையான தொற்று நோயை கட்டுப்படுத்த உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தினோம்.

இருப்பினும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை.

இக்காரணிகளுடன் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட தாக்கங்களினாலும் இன்று தேங்காய் தட்டுப்பாடு தீவிரமடைந்துள்ளது.என்றார்.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு!

August 31, 2026
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; மட்டக்களப்பில் புனர்வாழ்வு நிலையம் தேவை
செய்திகள்

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; மட்டக்களப்பில் புனர்வாழ்வு நிலையம் தேவை

August 31, 2026
சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!
செய்திகள்

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!

August 31, 2026
அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப கோரிக்கை!
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி. பதவிக்கு எதிரான மனு; உயர் நீதிமன்றத்திற்கு அனுப்ப கோரிக்கை!

August 31, 2026
மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்
உலக செய்திகள்

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முன்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்

August 31, 2026
எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை குறைந்தாலும் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றமில்லை!

August 31, 2026
Next Post
இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள்  அமெரிக்காவிற்குள் நுழைய தடை

இலங்கையின் முக்கிய இரு அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு