Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!

சாய்ந்தமருதில் ‘நாயிறைச்சி விற்பனை’ என பரவும் தகவல் பொய்; சுகாதார அதிகாரிகள் விளக்கம்!

2 months ago
in செய்திகள்

சாய்ந்தமருது பகுதியில் நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி சாய்ந்தமருது பிரதான வீதிப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புப் பரிசோதனையின்போது, ஆட்டிறைச்சிக் கடையொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த இறைச்சி பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த ஆட்டிறைச்சி உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன், அங்கீகரிக்கப்பட்ட கால்நடை வைத்தியரின் பரிசோதனைச் சான்றிதழும் இல்லாதமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த ஆட்டிறைச்சி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளரின் அனுமதியுடன் அழிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தச் சம்பவத்தைத் தவறாக சித்தரித்து, நாயிறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தக்கூடிய இவ்வாறான வதந்திகளை நம்பவோ அல்லது சமூக ஊடகங்களில் பகிரவோ வேண்டாம் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத குறித்த கடை உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

மைலத்தமடுவில் மீண்டும் கால்நடைகள் மீது துப்பாக்கிச் சூடு!

October 15, 2026
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணி வெடியில் சிக்கிய சிங்கப்பூர் கப்பல்

October 15, 2026
இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி
செய்திகள்

இறைச்சிக்காக மாட்டின் இரண்டு பின்னங்கால்களையும் வெட்டி கடத்த முயற்சி

October 15, 2026
கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான தகவல்களைப் பெற புதிய இணையத்தளம் அறிமுகம்!

October 15, 2026
மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்
செய்திகள்

மலையக அஸ்வெசும நிதியில் மோசடிசெய்ததை ஒப்புக்கொண்ட 14 ஊழியர்கள்

October 15, 2026
சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்
செய்திகள்

சரத் பொன்சேகா மற்றும் ரஞ்சன் ராமநாயக்க வரிசையில் ஞானசார தேரரும் விடுதலை செய்யப்படவேண்டும்; அம்பிட்டியே தேரர்

October 15, 2026
Next Post
மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; மட்டக்களப்பில் புனர்வாழ்வு நிலையம் தேவை

மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு; மட்டக்களப்பில் புனர்வாழ்வு நிலையம் தேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு