அத்துருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையமொன்றில் வைத்து வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் கிளப் வசந்த உள்ளிட்ட இருவரைக் கொன்ற குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 8 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் 8 பேரில் ஒருவரை ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் மேலும் இருவரை சரீரப் பிணையிலும் கடுமையான நிபந்தனைகளிலும் விடுவிக்குமாறு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இர்ஷாதீன் நேற்று (10) உத்தரவிட்டார்.
இந்த 08 சந்தேக நபர்களும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது கடவுச்சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அத்துருகிரிய பொலிசில் ஆஜராகி கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவிட்டார்.