மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வேலைத் திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த பிரம்படித்தீவு குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கு நிகழ்வு பிரம்படித்தீவு பொதுக் கட்டடத்தில் இடம் பெற்றது.
பிரம்படித்தீவு பகுதிகளில் பாதிக்கப்பட்ட 146 குடும்பங்களுக்கும் மற்றும் சாராவெளி பகுதிகளில் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்குமாக 159 குடும்பங்களுக்கு சுவிஸ்லாந்தில் வசிக்கும் தம்பிப்பிள்ளை உதயதாஸ் அவர்களால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் நிதி உதவியின் மூலமும், சுவிஸ்லாந்து வேன் சைவ நெறிக் கூடம் ஸ்ரீ ஞானலிங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆலயத்தினால் வழங்கப்பட்ட நிதி உதவி மூலமும் அமரத்துவமடைத்த திருமதி.சண்முகநாதன் புவனேஸ்வரி அவர்களின் நினைவாக பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் அவரது மகனின் நிதி உதவி மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு இரண்டு பாய் மற்றும் இரண்டு போர்வை விரிப்பும் மற்றும் கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் 200 கிராம் பால்மா பக்கற் உதவி மூலம் தலா ஒரு குடும்பத்திற்கு ஒரு பால்மா பக்கற் வீதம் வழங்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற நிவாரண உதவி வழங்கும் நிகழ்வில் கிராம அதிகாரி கா.முருகானந்தன், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் கோறளைப்பற்று பிரதேச இணைப்பாளர் ந.குகதர்சன், பேரவையின் உறுப்பினர்களான பூ.கிரிதரன், எஸ்.சுதன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி வைத்தனர்.
குறித்த பிரதேச மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வாழைச்சேனை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் இடைத்தங்கல் முகாமில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.