புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது.
அதில் ஒரு ஆசனத்திற்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.