வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மூகநூல் சற்றுமுன்னர் உலகளாவிய முடங்கியுள்ளது.
இதனால் 50,000 க்கும் மேற்பட்ட மூகநூல் பயனர்கள் உள்நுழைவு மற்றும் பதிவேற்ற சிக்கல்களைப் சந்தித்துள்ளதாக முறைப்பாடு அளித்துள்ளனர்.
இதேவேளை, மில்லியன் கணக்கான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் பயனர்கள் செய்திகளை அணுகுவதிலும் அனுப்புவதிலும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், மெட்டா நிறுவனம் இது தொடர்பில் தமது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தொழில்நுட்பச் சிக்கல் காரணமாக சில பயனர்களின் பயன்பாடுகளை அணுகும் திறனைப் பாதிக்கிறது என்பதை நாங்கள் அறிவோம். முடிந்தவரை விரைவாக விடயங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாங்கள் உழைத்து வருகிறோம், சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளது.