தாய்லாந்தில் டிசம்பர் 1-10 வரை நடைபெற்று முடிந்த Asian Schools Chess Championship 2024 இல் ஏழு வயது பெண்கள் பிரிவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய மாணவி கஜிஷனா தர்சன் சாதனை படைத்துள்ளார்.
Classical Chess போட்டியில் ஆசியாவில் 6 ஆவதாகவும், எமது நாடு சார்பாக முதலாவதாகவும் மற்றும் Rapid Chess போட்டியில் ஆசியாவில் 9 ஆவதாகவும், எமது நாடு சார்பில் 1ம் இடத்தையும் பெற்று இவ் இரண்டிலும் எமது நாட்டினை தரப்படுத்தலிலும் முன்னிலைப்படுத்தி இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்று இவர் சாதனை படைத்துள்ளார்.
இவர் யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி என்பதுடன், மிகவும் இளைய வயதில் சர்வதேச ரீதியில் சாதனை படைத்து நாட்டிற்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளமை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.