நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்கள் மற்றும் ஊனமுற்ற போர் வீரர்கள் குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் தொடர்பில் பிரதி அமைச்சர் கவனம் செலுத்தினார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) தலைமையில் அங்கவீனமுற்ற படைவீரர்களுக்கான நலன்புரி மற்றும் சலுகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு நோக்கத்தோடு கூட்டம் ஒன்று நேற்று முன்தினம் (டிசம்பர் 11) பிரதி பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார். பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் – பாதுகாப்பு, ரணவிரு சேவா அதிகாரசபையின் (RSA) தலைவர் மற்றும் சிரேஷ்ட முப்படை அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த சபைக்கு தலைவராக மேலதிக செயலாளர் – பாதுகாப்பு நியமிக்கப்பட்டார், மேலும் RSA இன் தலைவர் மற்றும் முப்படைகளின் நலன்புரி பணிப்பாளர்களும் மற்றும் உயர் அதிகாரிகளும் இதில் அடங்குவர்.
இக்கலந்துரையாடலில் அங்கவீனமுற்ற வீரர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை உரிய முறையில் இனங்காண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டதுடன், இனங்காணப்பட்ட பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கும் இச்சபை நியமிக்கப்பட்டது.
அங்கவீனமுற்ற படைவீரர்களின் நலனை உறுதி செய்வதற்கும் அவர்களின் தேவைகளை கட்டமைக்கப்பட்ட மற்றும் கூட்டு அணுகுமுறையின் மூலம் திறம்பட நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.