திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நேற்று மாலை (14) பேத்தாழை பொது மயானத்தில் இடம்பெற்றது.
பேத்தாழை விவேகானந்தா சனசமூக நிலையத்தினரால் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தநாளில் இறந்த உறவுகளை நினைத்து தீபம் ஏற்றிஅஞ்சலி செலுத்துவது வழக்கமாகும்.
இதே போன்று இவ்வருடமும் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரதேச மக்கள் இறந்த தமது உறவுகளுக்காக ஆலயத்தில் விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டு அர்ச்சனை செலுத்தி இறை வழிபாட்டில் ஈடுபடுவர். பின்னர் மாலை வேலை மயானம் சென்று தீபம் ஏற்றி இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.