பிரான்சில் டன்கிர்க் அருகே பிரெஞ்சு புலம்பெயர்ந்தோர் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பாதுகாப்புப் படையினர் உட்பட குறைந்தது ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
டன்கிர்க் அருகே Loon-Plage பகுதியில் நடந்த இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடந்ததன் பின்னர் ஆயுததாரி தன்னைத்தானே அதிகாரிகளிடம் சரணடைந்ததாகவே கூறப்படுகிறது.
துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் தாக்குதலில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலை அடுத்து, சம்பவயிடத்திற்கு சிறப்பு பொலிசார் விரைந்துள்ளனர். இதில் 2 புலம்பெயர் மக்கள் மற்றும் காவலர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால், ஆயுததாரி இன்னொரு கொலையும் செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது. கொல்லப்பட்ட புலம்பெயர் மக்கள் இருவரும் குர்திஷ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் துப்பாக்கி குண்டு காயங்களால் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
சிறிது நேரத்திற்குப் பிறகு, ஆயுததாரி அருகில் கார்ப்பரேட் வளாகத்தில் காவலில் இருந்த இரண்டு காவலர்களைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்ட நபருக்கு 22 வயதிருக்கலாம் என்றும், இந்த சம்பவத்திற்கு முன்னர் அந்த இளைஞரை அதிகாரிகளுக்கு அறிமுகம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி Ghyvelde காவல் நிலையத்தில் அந்த நபர் சரணடைந்துள்ளார். அவர் கொலை வழக்குகளை எதிர்கொள்வார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், பொலிசார் சோதனையிட்டபோது அவரது காரில் பல ஆயுதங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
அந்த இளைஞர் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை. வடக்கு பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களைச் சுற்றி ஆட்கடத்தல்காரர்களால் துப்பாக்கி மற்றும் கத்தியால் தாக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது.