மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சஹாயபுரம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவர் இன்று (15) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் -சஹாயபுரம் பகுதியைச் சேர்ந்த அன்ரன் பிரஜித் வயது (25) என தெரியவருகிறது.
குறித்த இளைஞன் எவ்வாறு உயிரிழந்தார்? கொலையா, தற்கொலையா? என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.
சம்மந்தப்பட்ட விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.