முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று (19) குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் என்னும் நபர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பாகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் மேல் குறிப்பிட்ட விடயம் காரணமாக தன்னை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைத்திருப்பதாக கருணா அம்மான் இதற்கு முன்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.