இரத்தினபுரி, கஹவத்தையில் உயிரிழந்த மனைவியின் மரணத்தை மறைக்க முயற்சித்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கி 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து உடலை, குளித்ததனை போன்று செய்து, துண்டு ஒன்றை உடலில் கட்டி மரணத்தை மறைக்க முற்பட்ட சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் கணவர் கைது செய்யப்பபட்டுள்ளார்.
பொலிஸாரின் விசாரணையில், மின்சாரம் தாக்கியதற்கான காரணத்தை மறைக்க, இறந்த பெண்ணின் உடலில் ஈரமான ஆடைகளை அணிவித்து, சடலத்தை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
17ஆம் திகதி பிற்பகல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 2 பிள்ளைகளின் தாயான செனரத் சந்திரலதாவின் பிரேத பரிசோதனையின் போதே இந்த உண்மை தகவல் வெளிவந்துள்ளது.
சாட்சியமளித்த உயிரிழந்த பெண்ணின் கணவர், குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்த தனது மனைவியின் பலத்த அலறல் சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்று நான் பார்த்த போது கீழே கிடந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு தான் நடந்தது என தந்தைக்கு ஆதரவாக 20 வயதுடைய மகனும் பொய் சாட்சி வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த விசாரணைகளின் அடிப்படியின் போது விலங்குகளுக்காக பொருத்தப்பட்ட பாதுகாப்பற்ற மின்சார கம்பியில் சிக்கியமையே பெண்ணின் மரணத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.