நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற 10 வீதி விபத்துகளில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
மட்டக்களப்பு, ஹட்டன், சீதுவ, பின்னதுவ, மாரவில, ஹம்பலாந்தோட்டை, மிரிஹான, கம்பளை, ஹெட்டிபொல, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது எனவும், இதில் 4 பாதசாரிகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பண்டிகைக் காலங்களில் வீதிகளில் பயணிக்கும் போது அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.