திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவின் சார்ஜன்ட் ஒருவர் பணப் பிரச்சினையை தீர்ப்பதற்காக முறைப்பாட்டாளரிடம் இருந்து 5000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற போது கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் பல்வேறு முறைப்பாடுகள் பிரிவில் கடமையாற்றியவர் என்பதுடன், 5000 ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய சார்ஜன்ட் திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தின் சிற்றுண்டிச்சாலையில் இலஞ்சம் பெற்றுக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உப்புவெளி பொலிஸில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.