இலங்கையின் 2006 ஆம் ஆண்டு எண்.6 (FTRA) நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டத்தின் விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக, இந்தியன் வங்கிக்கு இலங்கை மத்திய வங்கி அபராதம் விதித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராத தொகையானது இலங்கை பெருமதியில் (LKR) இரண்டு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.3
இலங்கையில் இந்தியன் வங்கியானது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் இரண்டு கிளைகளுடன் இயங்கி வருகிறது.
“இலங்கையில் உள்ள இந்தியன் வங்கியும் அதன் கிளைகளும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளன” என்று மத்திய வங்கி மேலும் கூறியுள்ளது.
இருப்பினும், அபராதத்திற்கான காரணம் தொடர்பில் இந்தியன் வங்கி எவ்வித அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.