ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு எவ்வளவு நிதி தேவைப்படும் என்பது தொடர்பில் மதிப்பிட்டு
தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறி
விக்கப்பட்டுள்ளது என சிங்கள இணைய ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்களுடன் ஜனாதிபதி அண்மையில் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த பாதீட்டில் நிதி ஒதுக்கவேண்டி இருப்பதால் அது
தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையை நிதி அமைச்சுக்கு விரைவில் அனுப்புமாறு ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடம் முற்பகுதியில் நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.