கிரான் இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் நிர்வகித்து வரும் அன்னை ஸ்ரீ சாரதாதேவி ஆங்கில முன்பள்ளியின் வருடாந்த கலை விழாவும் பிரிவுபசார வைபவமும் நேற்று செவ்வாய் கிழமை (24) கிரான் ரெஜி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
முன்பள்ளியின் அதிபர் திருமதி வசுமதி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அதிதிகள் மலர்மாலை அணிவித்து மாணவர்களின் பாண்டு வாத்திய இசையுடன் வரவேற்கப்பட்டனர்.தொடர்ந்து மங்கள விளக்கேற்றல்,இறைவணக்கம்,தமிழ் மொழி வாழ்த்து பாடலுடன் இன்றைய நிகழ்சிகள் யாவும் ஆரம்பமாகின.
முன்பள்ளியின் அதிபர் திருமதி வசுமதி ரவிக்குமார் தலைமையுரை நிகழ்த்தினார்.
மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்வுகள் மும்மொழிகளிலும் இடம்பெற்றன.
இதன்போது மாணவர்களின் பல்வேறுபட்ட கலை நிகழ்சிகளான நடனம்,பாடல்,பேச்சுக்கள்,ஆங்கில கவிதைகள்,நாட்டார் பாடல்,சிங்கள அபிநய நடனம,; ஆங்கில பாடல்களுக்கான நடனம் என்பன போன்ற மாணவர்களின் நிகழ்வுகள் அரங்கில் இருந்த பார்வையாளர்களை கவர்ந்தன.
கல்வி கற்பித்த ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் வாழ்த்து மடல் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாலர் பாடசாலை கல்விப் பணியக செயலாற்றும் பணிப்பாள் ரி.பத்மநாதன்,கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக மாவட்ட செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் வி.முரளிதரன் சிவஸ்ரீ பி.கஜரூபன் சர்மா,கிரான் மத்திய கல்லூரி அதிபர் எஸ்.செல்வசுதேசன், கல்குடா கல்வி வலய நடன ஆசிரியர் திருமதி சுகந்தினி நிறஞ்சன் ஆகியோர்கள் கலந்த கொண்டனர்.
சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளைப் பருவ வெளிக்கய உத்தியோகததர் வி.கயல்விழி, ஓய்வு பெற்ற அதிபர்களான செல்வி பிரின்சி ஜெயவீரரெட்னம்,திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன்,திருமதி தெய்வமணி சிவானந்தம்
ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இவ் முன்பள்ளியானது கிரான் பிரதேச மாணவர்கள் மட்டுமில்லாது ஏனைய அயல் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு சேவைகளை வழங்கி செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.