அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை சார்ந்திருக்கும் பொதுமக்களுக்கான மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகம் மற்றும் ஆலய வண்ணக்குமார் சபையினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் திருத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மிக உயரமாக இருக்கும் கோபுரத்தைச்சுற்றி ஓலைகள் வேயப்பட்டுள்ளதால் வான வேடிக்கைகள் செய்வதையும், பட்டாசுகள் கொளுத்துவதையும் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
“ஆபத்து வருமுன்காப்போம்” என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.