Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் தினேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார, நீண்டகாலமாக வருமான வரி செலுத்தாமையால் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கடந்த சனிக்கிழமை (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக 700 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான வருமான வரி செலுத்தாமையால் குஷானி நாணயக்கார எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிரீன் லங்கா டிராவல்ஸ், கிரீன் சீட் லங்கா மற்றும் கிரீன் ஸ்ரீ லங்கா ஷிப்பிங் ஆகியவற்றின் வர்த்தகரும் பணிப்பாளருமான குஷானி நாணயக்கார, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கைகள் விடுத்தும் பல ஆண்டுகளாக வரி செலுத்தத் தவறியுள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பல தடவைகள் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்புக்களை புறக்கணித்த பின்னர் அவர் மீது சட்டநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இருப்பினும், அந்த அறிவிப்புகளை அவர் புறக்கணித்து வருவதால், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தொழிலதிபருக்கு எதிராக வருமான வரிச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிவான் நீதிமன்றம் எண் 09 இல் வழக்குத் தொடர்ந்துள்ளது.

இந்த நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, கொழும்பு உயர் நீதிமன்றமும் அவருக்கு மூன்று அழைப்பாணைகளை அனுப்பியுள்ளது.

குஷானி தொடர்ந்து நீதிமன்றத்தைத் தவிர்த்து வந்ததால், அவரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அவரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் நேரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை அடுத்து, கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் ஷானி அபேசேகர தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போது நாரஹேன்பிட்டவில் உள்ள வீடொன்றில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கையின் போது வீட்டின் பின்வாசல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற நிலையில் வீட்டை சுற்றிவளைத்திருந்த பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு