மட்டக்களப்பில் உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உள்ளான சீயோன் தேவாலயத்தில் இன்று புதன்கிழமை (25) இராணுவ பாதுகாப்புடன் ஆராதனைகள் இடம்பெற்றது.
நாடளாவிய ரீதியில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் மட்டக்களப்பில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்பிரல் 21 ம் திகதி உயிர்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலையடுத்து குறித்த தேவாலயம் மென்ரசா வீதியில் நிர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தேவாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நத்தார் விசேட ஆராதனையையடுத்து அங்கு இராணுவ பாதுகாப்புடன் இடம்பெற்றுள்ளது
அதேவேளை மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு நேற்று செவ்வாய்கிழமை (24) இரவு தொடக்கம் பொலிசார் பலத்த பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.