யாழ் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக முகநூலில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்படுவதாவது,
யாழ் சுன்னாகம் பகுதியில் சுன்னாகம் பொலிசாரின் அனுசரணையுடன் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.
சுன்னாகம் தெற்கு கல்லாக்கட்டுவன் பகுதியில் அரசராசன் என்பவரின் மனைவி வதனா என்று அழைக்கப்படும் தங்கமணி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்து கசிப்பு காச்சி விற்பனை செய்து வருகிறார். இவரை மூன்று தடவைகள் சுன்னாகம் பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தினார்கள் ஆனால் ஒவ்வொரு தடவையும் கைது செய்யும்போது ஒரு போத்தல் சாராயம் மட்டுமே நீதிமன்றில் கையளிக்கப்பட்டது.
இதற்கான டீல் 30000 ருபா பொலிசாருக்கு வழங்கவேண்டும் அப்படி வழங்கினால். குறைந்த அளவு சாராயம் மட்டுமே நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் அது பாரிய குற்றம் அல்ல சிறு தண்டம் அறவிடப்படும் குற்றவாளி விடுதலை செய்யப்படுவார். இப்படி மூன்று தடவைகள் நடந்தன ஆனால் இப்போது. மாசம் 100000 ஒருலட்சம் ரூபா வழங்கப்படுகிறதாம் அதனால் பொலிசார் வீட்டுப்பக்கம் வருவதே இல்லை என வந்தனா ஒருவருக்கு கூறியுள்ளார்.
பல இடங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து கொள்வனவு செய்து கொண்டு செல்கிறார்கள். உள்ளூர் வியாபாரிகளுக்கு வந்தனாவின் மகள் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கொடுக்கிறார். அவரின் மூன்று ஆண் பிள்ளைகளும் கசிப்பு விற்பனைக்கு உறுதுணையாகவும் இரண்டாவது மகன் கஞ்சா விற்பனையும் செய்து வருகின்றார்.
இது தொடர்பாக பொலிசாரிடம் தொலைபேசி ஊடாக தெரிவித்தால் அவர்களின் இலக்கம் வந்தனாவுக்கு பொலிசாரால் வழங்கபடுகிறது.
இது தொடர்பாக சனசமூக நிலைய தலைவருக்கு தெரிவிக்கலாம் என்று பார்த்தால் தலைவரின் வீட்டில் தான் கசிப்பு பதுக்கி வைக்கப்படுகிறது .
இலங்கை மின்சார சபையில் பணி புரியும் தம்பிதுரை சுஜீவன் என்பவரே தலைவர் ஆவர் இவர் தினமும் வதனா வீட்டில் கசிப்பு குளித்துவிட்டு நிறை போதையில் நிற்பது வழமையாகும்.
எனவே இந்த சமூக சீரழிவில் இருந்து மக்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறு ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.