ஹபரணை பொலன்னறுவை பிரதான வீதியில் ஹத்தே கன்வானுக்கும் படுஓயாவுக்கும் இடையில் 38 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் நேற்றிரவு (25) இரவு கெப் வாகனமொன்றில் எரிந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹபரணை மின்னேரிய வீதியில் பயணித்த நபர் ஒருவர் கெப் வாகனமொன்று தீப்பிடித்து எரிவதாக மின்னேரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மின்னேரிய பொலிஸார் எரிந்துகொண்டிருந்த கெப் வாகனத்தை கண்டெடுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (25) இரவு 10 மணியளவில் தீ பரவியதாகவும், அப்போது கெப் வாகனம் ஹபரணை நோக்கி நிறுத்தப்பட்டதாகவும், அதில் வேறு யாரும் இருக்கவில்லை என்றும் மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நபர் ஒருவரைக் கொன்று அவரது சடலத்தை வண்டியில் ஏற்றி, கெப் வாகனத்தை இந்த பகுதிக்கு கொண்டு வந்து தீ வைத்து எரித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மின்னேரியா பொலிஸாரும் பொலன்னறுவை மாநகரசபையின் தீயணைப்புத் திணைக்கள அதிகாரிகளும் வந்து பெரும் முயற்சியில் தீயை முழுமையாக அணைத்தனர்.
மேலும், தீப்பிடித்த கெப் வாகனம் கொழும்பு பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.