சுனாமி ஆழிப்பேரலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நினைவு தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக நடத்தப்பட்டன.
மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்தும் பல நிகழ்வுகள் நடைபெற்றன. அடிப்படையில் கல்லடி டச் பார் பிரதேசத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து கல்குடா பங்குத்தந்தை அருட்பணி நோட்டன் ஜோன்சன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.
உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து ஒளிவிளக்குகள் ஏற்றும் நிகழ்வும் இங்கு நடைபெற்றது; உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை வழிபாடுகளும் இங்கு இடம் பெற்றன.
கல்லடி டச் பார் தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை லோரன்ஸ் அடிகளார் உட்பட பல சமய பிரமுகர்களும், உயிர் நீத்தவர்களின் உறவுகளும் பெருமளவிலும் இங்கு கலந்து கொண்டனர்.
இதன்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து நினைவுத் தூபிக்கு ஒளி விளக்குகள் ஏற்றும் நிகழும் இடம் பெற்றது. இது தவிர திராய்மடு பகுதிகளிலும் உயிர் நீத்த மாக்களை நினைவு கூர்ந்து நினைவு தின நிகழ்வுகளும் இடம் பெற்று, அன்னதானம் வழங்கும் நிகழும் இங்கு இடம் பெற்றது