ஹிக்கடுவ, தொடந்துவ பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற இந்திய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முன்தினம் (25) மாலை தனது மகள், மகன் மற்றும் மற்றுமொரு நபருடன் கடலில் நீராடிக் கொண்டிருந்த போதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பிரதேசவாசிகள் அவரை கரைக்கு அழைத்து வந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும், அவர் நபர் உயிரிழந்துள்ளார்.
57 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இந்திய பிரஜையின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.