எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் மலையகத்தில் புதிய வேட்பாளர்களைக் களமிறக்க மொட்டுக் கட்சி தீர்மானித்துள்ளது.
தற்போதைய நிலையில் மொட்டுக் கட்சியை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ முன்னெடுத்து வருகின்றார்.
அதன் ஒருகட்டமாக கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் உள்வாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கு அப்பால் மலையகத்தில் வலுவாக காலூன்றுவது தொடர்பிலும் அக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
அதன் பிரகாரம் மலையகத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களின் போது புதிய வேட்பாளர்களைக் களமிறக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.