மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு குடிகொண்டுள்ள ஸ்ரீ ஐயப்பசுவாமி ஆலயத்தின் வருடாந்த நிகழ்வான ஆபரணப்பெட்டி எடுத்துவரும் நிகழ்வு குருசாமி சிவஸ்ரீ விஜயகுமார் தலைமையில் நேற்று (26) நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவடிவேம்பில் முதன் முதல் அமைக்கப்பட்ட இவ் ஆலயம் இன்று புகழ்பெற்று விளங்குகிறது.
செங்கலடி உதயகுமார் சர்மி இல்லத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று ஐயப்பன் மாலை அணிந்த சாமிமார்கள் ஆபரணப்பெட்டியை சுமந்த வண்ணம் மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசித்து அங்கிருந்து ஆலயத்தை வந்தடைந்தனர்.

இதன்போது வந்தாறுமூலை மகாவிஷ்ணு பஜனை குழுவினரின் ஐயப்பன் பஜனை பாமாலை இசையுடன் இவ் ஆபரணப்பெட்டி வீதி வழியாக எடுத்துவரப்பட்டது.
இவ் நிகழ்வில் கலந்து கொண்டோர்களில் சிலர் இந்தியாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்ய முடியாத நிலை காணப்படுவதால் அவர்களின் நலன் வேண்டி நெய் அபிஷேகப் பூசையுடன் இவ் நிகழ்வு இடம்பெற்றது. ஏனையோர்கள் எதிர்வரும் சில தினங்களில் இந்தியா சென்று அங்கு தரிசனம் செய்து ஜோதி பூஜை கண்டவுடன் மீண்டும் இலங்கை வந்தடைவர்.












