பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சுமார் 159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஒழுங்குமுறையின் கீழ் அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம், நுகர்வோர் விவகார அதிகாரசபையுடன் இணைந்து தேவையான எடையில் பாண் விற்கப்படுவதை உறுதிசெய்ய சோதனைகளை நடத்துவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.