நேற்றிரவு உயிரிழந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (27) புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, ரணில் விக்ரமசிங்க மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு தனது இரங்கலைத் தெரிவித்ததார்.
அதேநரேம், இறுதி அஞ்சலிக்காக புதி டெல்லியில் உள்ள இந்திய முன்னாள் பிரதமரின் இல்லத்துக்கு வருகை தந்திருந்த இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
ரணில் விக்கிரமசிங்க தற்போது இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள நிலையில், அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இந்திய பிரதமருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.