Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள்

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

நெதா்லாந்து நாட்டில் இருந்து இரு அரிய வகை சிவப்பு பாண்டா கரடிகள் இந்தியாவின், மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் வன உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்படாமல் இருந்தன. கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி நெதா்லாந்தின் ரோட்டா்டாம் பகுதியிலிருந்து இந்த பாண்டாக்கள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

டாா்ஜிலிங் பூங்காவில் சிவப்பு பாண்டாக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே 19 சிவப்பு பாண்டாக்கள் உள்ளன. இவற்றில் இரண்டு குட்டிகளென்பது குறிப்பிடத்தக்கது.

சிவப்பு பாண்டாக்களுக்கு தேவையான குளிரான வானிலை எப்போதும் நிலவுவதால் டாா்ஜிலிங் பூங்கா தோ்வு செய்யப்பட்டது. சிவப்பு பாண்டாக்கள் இரண்டரை வயதுடையவை. மத்திய மாநில அரசுகளின் பல ஆண்டுகால தொடா் முயற்சிகளால் நெதா்லாந்தில் இருந்து சிவப்பு பாண்டா வருகை சாத்தியமாகியுள்ளது.

இந்த பாண்டாக்கள் விமானத்தில் 27 மணி நேரம் பயணித்துள்ளன. கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து குளிா்சாதன வசதியுள்ள சிறப்பு வாகனத்தில் டாா்ஜிலிங்குக்கு கொண்டுவரப்பட்டன. ஒருமாதம் காண்காணிப்பில் வைக்கப்பட்டு, ஏற்கெனவே பூங்காவில் உள்ள இரு சிவப்பு பாண்டாக்களுடன் இவை சோ்க்கப்படும். அவற்றுக்கு விஷால், கோஷி எனப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

1990-ஆம் ஆண்டு முதல் முதலில் ஒரு ஆண் மற்றும் 3 பெண் சிவப்பு பாண்டாக்கள் கொண்டுவரப்பட்டன. இந்த வகை சிவப்பு பாண்டாக்கள் கிழக்கு ஹிமாசல மலையில் இருந்து தென் மேற்கு சீனா வரையிலான பகுதியை பூா்விகமாகக் கொண்டவையாகும்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!
செய்திகள்

மகசின் சிறைக்குள் போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது!

August 8, 2026
மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!
செய்திகள்

மூதூர் 17 தன்னார்வத் தொண்டர்களின் படுகொலையின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்!

August 8, 2026
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!
செய்திகள்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 இந்திய மீனவர்களை விடுவிக்க கோரிக்கை!

August 8, 2026
சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!
செய்திகள்

சிறைச்சாலை அசாதாரண சூழ்நிலை; தமிழ் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை!

August 8, 2026
டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு!

August 8, 2026
வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!
செய்திகள்

வலப்பனையில் அம்மன் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை நிறுவ முயற்சி!

August 8, 2026
Next Post
உலக சாதனையைப் படைத்த “ப்ரைம் டைமர்ஸ்” என்ற பாடகர் குழு

உலக சாதனையைப் படைத்த "ப்ரைம் டைமர்ஸ்" என்ற பாடகர் குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு