பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 408 வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் 6,581 வர்த்தக நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
காலாவதியான உணவுகள், தீங்கு விளைவிக்கும் வண்ணம் மற்றும் சுவையூட்டும் உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.