இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக கட்சியின் மத்திய குழு இன்று (28) வவுனியாவில் கூடியிருந்த போதே இந்த இந்த தீர்மானம் எடுக்கப்படுள்ளது.
இந்த தீர்மானமானது, கட்சியின் யாப்பின் அடிப்டையில் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த கூட்டத்தில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், வெளிநடப்பு செய்துள்ளார்.
இதன்போது, அவர், மத்தியகுழுவினால் பதில் தலைவரை நியமன் செய்ய முடியாது. அது பொதுகுழுவின் நடவடிக்கை என கூறி மத்திய குழுவின் குறித்த தீர்மானம் தவறானது என சுட்டிக்காட்டி அவர் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“தமிழரசுக் கட்சியின் தலைவர் நான்தான்”; மாவை தெரிவிப்பு
https://battinaatham.net/?p=106097