மட்டக்களப்பில் முதற் தடவையாக கிச்சன் ஜம்போரி நிகழ்வானது கும்புறுமூலை அமிர்தம் உணவகத்தின் முன்றலில் இடம்பெற்றது.
சாரணிய மாணவர்களது தனித்துவத்தையும் ஆளுமையையும் வெளிக்கொனரும் வகையில் தமிழர் பண்பாடோடு இணைந்த வகையில் பொங்கல் நிகழ்வானது கிச்சன் ஜம்போரியில் தயாரித்து காட்டப்பட்டது.
நிகழ்வில் அமிர்தம் உணவகத்தின் பணியாளர்களும் சாரணீய மாணவர்களும் இணைந்து நிகழ்திக் காட்டினார்கள்.
இதன் முதல் நிகழ்வு திரும்பெருந்துறையில் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 60 மேற்பட்ட சாரண மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளர் சசிகுமார் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.மத்திய கல்லூரியின் சாரணத் தலைவர்கள்,கல்குடா வலயத்தில் உள்ள சாரணிய பாடசாலை மாணவிகளும் பங்கு பற்றியிருந்தனர்.
இவ் நிகழ்வானது டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெறுவது வழக்கம்.ஆனால் இலங்கையில் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் பங்கபற்றுவதற்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பித்த மாணவர்கள் சர்வதேச தரம் வாய்ந்த சாண்றிதழ்கள் பெறுவதற்கு தகுதியானவர்கள்.இதற்கான நிதி அனுசரணையை அமிர்தம் உணவகத்தினர் வழங்கியிருந்தனர்.