இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ. சுமந்திரன் செயற்படுவார் என கட்சியின் பதில் தலைவராக இன்று (28) நியமிக்கப்பட்ட சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் முடிவடைந்ததன் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்தவர்,
பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற குழு பேச்சாளராக ஸ்ரீநேசனை நியமித்துள்ளமையினால் அவர் பாராளுமன்ற விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பார்.
எனினும், தமிழ் அரசு கட்சியின் ஊடகப் பேச்சாளராக தொடர்ந்து எம்.ஏ.சுமந்திரன் செயற்படுவார் என்றும் தெரிவித்திருந்தார்.