Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

பிள்ளையானின் கட்சிக் காரியாலயத்தில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதலில் தோட்டாக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற சி.ஐ.டி.யினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் நேற்று (30) முற்றுகையிட்டு இரவு 11 மணி வரை தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த நிலையில் அவர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கடந்த ஏப்ரல் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாதகாலம் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு, முதலாவது வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தை, கொழும்பில் இருந்து சென்ற விசேட அதிரடிப்படையினர் மற்றும் சி.ஐ.டி. யினர் நேற்று பகல் 11 மணிக்கு முற்றுகையிட்டு சோதனை நடத்தினர்.

விசேட அதிரடிப்படையினர் மற்றும் சி.ஐ.டி. யினர் காரியாலயத்தின் நிலத்தை உடைத்து பல மணிநேர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில், அங்கிருந்து 3 கையடக்கத் தொலைபேசிகள், ஒரு சாரதி அனுமதிப்பத்திரம், ஒரு கடவுச்சீட்டு, ஒரு ஐ பேட், கைத்துப்பாக்கி உறை, 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி தோட்டாக்கள் 6, ரிப்பிட்டர் துப்பாக்கியின் 5 வெற்றுத் தோட்டாக்கள் ஆகியவற்றை மீட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையானது பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரையும் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு
https://battinaatham.net/?p=131683

Tags: BatticaloaBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து
செய்திகள்

மன்னார் நோக்கிச் சென்ற அருட்சகோதரிகள் பயணித்த வாகனம் விபத்து

July 22, 2026
ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
Next Post
தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

தமது கட்சி அலுவலகத்தில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை; ஊடகங்கள் பொய்யான செய்தி வெளியிடுவதாக பிரசாந்தன் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு