இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய மறைக்கல்வி மாணவர்கள், பக்திச்சபைகளின் நிகழ்ச்சி பங்களிப்புடனான ஒளி விழா நிகழ்வு நேற்று (28) இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை C.V.அண்ணதாஸ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வானது, மறைக்கல்வி ஆசிரியர்களால் ஒருங்கமைக்கப்பட்டிருந்ததுடன், பங்கு மேய்ப்புபணிச்சபையும் தமது ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
இந்த நிகழ்வில் மாணவர்கள் தங்களது திறமைகளை காட்டியிருந்ததுடன், பக்திச் சபை உறுப்பினர்களும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தனர்.
அதேசமயம் புள்ளிகளிலும், வரவுகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை மேலும் குறிப்பிடத்தக்கது.