Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கோவிட் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை; மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள கோவிட் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை; மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது, ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை. அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், உயிரிழந்த குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் தற்போது ஆசியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபு இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

Tags: Battinaathamnewssrilankanews

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!
அரசியல்

மதுபானம் வாங்கிக் கொடுக்கவில்லை; அனுராதபுர கூட்டம் குறித்து சாகர காரியவசம் விளக்கம்!

September 15, 2026
கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!
செய்திகள்

கொழும்பு உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

September 15, 2026
லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!
உலக செய்திகள்

லண்டனில் தமிழ்நாட்டிற்கு ரூ.11,000 கோடி முதலீடு; 7,000 வேலைவாய்ப்பு உருவாக்கம்!

September 15, 2026
Next Post
யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்ற விஷமிகள்

யாழில் பெண் தலைமைத்துவ குடும்பம் வளர்த்த கோழிகளை விஷம் வைத்து கொன்ற விஷமிகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு