மட்டக்களப்பு வாகரை பிரதேச பால்சேனை கடலோரத்தில் படகு என நம்பப்படும் பாரிய மிதப்பொன்று இன்று காலை (31) கரையொதுங்கியுள்ளது.
மூங்கில்களினால் கட்டப்பட்ட இந்த படகில் மியன்மார் என ஆங்கிலத்தில் காணப்படுவதோடு அந் நாட்டு தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளதால் அந் நாட்டை சேர்ந்ததாக இருக்கலாம் என பிரதேச வாசிகள் நம்புகின்றனர்.
படகில் சமையல் பாத்திரங்களும் சில உணவு பொருட்களும் காணப்படுவதோடு விறகு அடுப்பில் சமைத்த அடையாளங்களும் காணப்படுகின்றன.
தகவல் அறிந்த வாகரை பொலிசார் மற்றும் கடல் படை அதிகாரிகள் படகை பார்வையிட்ட தோடு விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்றதொரு மற்றுமொரு மிதப்பு திருகோணமலை கடற்கரை பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கினறனர்.